Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2025 15:32:22 Hours

61 வது காலாட் படைப்பிரிவினால் மாத்தறையில் கடற்கரை சுத்தம்

"அழகான நாடு, புன்னகைக்கும் மக்கள்" என்ற கருப்பொருளின் கீழ் "தூய இலங்கை" திட்டத்தின் ஒரு பகுதியாக, 61 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 ஜனவரி 16 ஆம் திகதி மாத்தறை, தெவிநுவர மற்றும் திக்வெல்ல ஆகிய இடங்களில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றனர்.

மாத்தறை மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் கௌரவ திரு. சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

மேஜர் ஜெனரல் கே.டீ.பீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ், 613 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், மாத்தறை, திக்வெல்ல, ஹிரிகெட்டிய பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட 18 இடங்களில் படையினர் கடற்கரைகளை சுத்தம் செய்தனர்.

இலங்கை சிங்கப் படையணியின் 9 வது இலங்கை சிங்க படையணி 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றின் மொத்தம் 104 வீரர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.