16th January 2025 10:53:48 Hours
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.பீ.ஏ.ஆர்.பீ. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மன்னார், தல்லடியில் 2025 ஜனவரி 10 அன்று 'ரணவிரு அபிநந்தன பூஜை 2025' நடைபெற்றது. இந்த நிகழ்வில் இராணுவ படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் 250 பிள்ளைகளுக்கு, தலா 5,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் பாடசாலை பைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பட்டதாரிகள், ‘அதஹித’ 2025 திட்டத்தின் தலைவர் திரு. பிரசாத் லொக்குபாலசூரிய, திரு. சமன் குணரத்ன மற்றும் திருமதி. சமந்தா விஜேவர்தன ஆகியோருடன் இணைந்து நிதியுதவி வழங்கினார்.
இந் நிகழ்விற்கு சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பங்குபற்றினர்.