12th January 2025 18:13:39 Hours
அதிமேதகு ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 'தூய இலங்கை திட்டத்தின்' ஒரு பகுதியாக, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலில் மற்றும் 144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பி.வை.சீ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2025 ஜனவரி 11 அன்று சிரமதான திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தில் டென்சில் கொப்பேகடுவ சாலையின் இருபுறமும் குப்பைகளை அகற்றுதல் மற்றும் சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கியிருந்தது. காலை 0600 மணி முதல் காலை 0800 மணி வரை இந்த துப்புரவு திட்டம் நடைபெற்றதுடன், இதில் 144 வது காலாட் பிரிகேடின் 02 அதிகாரிகள் மற்றும் 74 சிப்பாய்கள் அடங்கியிருந்தன.
இந்த முயற்சி அரசாங்கத்தின் முயற்சியின் வெற்றிக்கான இலங்கை இராணுவத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.