Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2025 18:17:39 Hours

யாழ். வலிகாமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஏழைக் குடும்பத்திற்கு கையளிப்பு

ஆதரவு மற்றும் சமூக ஒத்துழைப்பின் அடையாளமாக உடுவில், வலிகாமம் தெற்கு பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு 2025 ஜனவரி 11 ஆம் திகதி ஒரு ஏழைக் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த வீடு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கட்டப்பட்டதுடன், வீடு கையளிக்கு நிகழ்வில் அவர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் 512 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.பீ.எஸ்.பீ. குலசேகர டபிள்யூடபிள்யூவி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

17 வது கெமுனு ஹேவா படையணி படையினர் இந்த வீட்டைக் கட்டுவதற்கு தொழில்நுட்ப ஆதரவையும் மனிதவளத்தையும் வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்த திட்டத்திற்கான நிதியுதவி மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பில் வன்னி எய்ட் கனடா அமைப்பினால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.