Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th January 2025 12:27:54 Hours

21 வது காலாட் படைப்பிரிவு படையினரால் திவுல்வெவ குளக்கட்டு சீரமைப்பு

21 வது காலாட் படைப்பிரிவு படையினர், 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி மற்றும் 5 வது (தொ) கஜபா படையணி படையினர் 2025 ஜனவரி 10 ஆம் திகதி திவுல்வெவ குளக்கட்டின் பகுதியளவு சேதமடைந்த பகுதியை வெற்றிகரமாக சரிசெய்தனர். இந்த சேதம் சுற்றியுள்ள சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தது.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே. வனசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரதி தளபதி மற்றும் கட்டளை அதிகாரிகளின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், படையினர் நிலைமையை சீராக்க விரைவாக செயல்பட்டனர்.

பொதுமக்களின் ஆதரவுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதற்கு, மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி அணையை பலப்படுத்தினர். அவர்களினால் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்தது.