08th January 2025 15:24:07 Hours
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி அகியவற்றின் கட்டளை அதிகாரிகளின் தலைமையின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் 04 ஜனவரி 2025 அன்று இரண்டு பயனுள்ள நன்கொடை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
கடவத்மடுவ தர்மபால கல்லூரியில் 198 பிள்ளைகள் மற்றும் 20 ஆசிரியர்களுக்கு பயனளிக்கும் வகையில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. காலிங்கவில பாடசாலை கேட்போர் கூடத்தில், 9வது களப் படையணியினரால் கலிங்கவில கனிஷ்ட வித்தியாலயம், மஹாசென்புர ஆரம்பப் பாடசாலை மற்றும் நாகஸ்தென்ன ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 430 குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கும் 28 ஆசிரியர்களுக்கும் கல்வி உதவிகள் வழங்கப்பட்டன.
பெற்றோர்களின் நிதிச் சுமையைக் குறைத்து பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் நோக்கத்துடன் தரண அறக்கட்டளை, தம்ரிச் அறக்கட்டளை மற்றும் சித்தாலேப குழுமம் ஆகியன இத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கின.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள், பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.