04th January 2025 18:29:18 Hours
பொறியியல் சேவைகள் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சி பீடீஎஸ்சி அவர்கள் 17 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு 28 டிசம்பர் 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகையின் போது அவரின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து 17 வது பொறியியல் சேவைகள் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஈ.ஏ.டி.பீ எதிரிசிங்க எல்எஸ்சி அவர்கள் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, குழு படம் எடுத்துக்கொண்டு, மாங்கன்று நாட்டியதுடன் படையினருக்கு உரையாற்றினார். அவர் தனது உரையில், இலங்கை இராணுவத்திற்கான அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஈடுப்பாட்டுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அதன்பிறகு, அவர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.
பின்னர், படையணியின் தற்போதைய திட்டங்கள், சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கட்டளை அதிகாரி விளக்கமளித்தார். விளக்கமளித்ததைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரி அதிகாரிகள் உணவகத்தில் மதிய உணவில் கலந்துகொண்டு வருகையை நினைவுகூரும் வகையில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.
இவ்விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.