Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2025 11:38:20 Hours

புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 31 டிசம்பர் 2024 அன்று இராணுவ தலைமையகத்தில் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமாக முறையான நிகழ்வின் போது கடமை ஏற்றார்.

வருகை தந்த புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் அவர்கள் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், அவர் தனது புதிய நியமனத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

கடமைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் அனைவருடன் குழு படம் எடுத்துகொண்டார். படையினருக்கான உரையுடன் நிகழ்வு நிறைவுற்றது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.