Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2024 07:33:48 Hours

வெளிச்செல்லும் இராணுவத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை

இராணுவத்தின் 24 வது தளபதியான ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் 2024 டிசம்பர் 30 ம் திகதி முறையான பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

வாகன அணிவகுப்பு மற்றும் ஓட்டுனர்களுடன் வருகை தந்த இராணுவத் தளபதியை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஜேகேஆர்பீ ஜயசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் வரவேற்றார். இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய, வெளிச்செல்லும் தளபதிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை மதிப்பாய்வு செய்தார்.

பதவி விலகும் தளபதியை கௌரவிக்கும் வகையில் சம்பிரதாய அணிவகுப்பு இடம் பெற்றமை விழாவின் சிறப்பம்சமாகும். பின்னர், இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள், இராணுவத் தளபதிக்கு வழங்கப்படும் மரியாதையை பெற்றுக் கொள்வதற்காக அவரை மேடைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சம்பிரதாயங்களுக்கமைய அணிவகுப்புத் தளபதியான, பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் அணிவகுப்பை ஆய்வு செய்வதற்கு முன்னர் பிரதம விருந்தினருக்கு சம்பிரதாய அறிக்கையை வழங்கினார்.

அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்தின் போது, வெளிச்செல்லும் இராணுவத் தளபதி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் இராணுவத் தலைமையகத்தில் பிரதான பதவி நிலை அதிகாரிகள் மற்றும் கள தளபதிகளுக்கு உரையாற்றியதுடன், தனது கட்டளையின் கீழ் அவர்கள் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர், புதிய இராணுவத் தளபதியான இலங்கை பீரங்கிப் படையணியின் மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடம் சம்பிரதாயங்களுக்கமைய கடமைகளை கையளிக்கும் நிகழ்வு தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தொடர்ந்து, வெளிச்செல்லும் தளபதி, பிரதான பதவி நிலை அதிகாரிகளுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டதுடன், தனது இறுதிக் குறிப்புகளை விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பதிவிட்டார்.

பிரதான பதவி நிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வழங்கிய மரியாதைக்குறிய பாதையோர பிரியாவிடையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. "ஜயஸ்ரீ, ஜயஸ்ரீ" என்ற அதிர்வு முழக்கங்களுடன் கூடிய கண்ணியமான ஊர்வலம், இராணுவத்தின் தொழில்முறை மற்றும் கௌரவத்தை உயர்த்துவதற்காக இரண்டு வருடங்களையும் ஏழு மாதங்களையும் அர்ப்பணித்த ஒரு தலைவருக்கு வழங்கும் மரியாதை மற்றும் கெளரவத்தை குறிக்கிறது.

மேலும், அன்று மாலையில் மைட்லேண்ட் பிரதேசத்திலுள்ள நலன்புரி வசதி வளாகத்தில் சம்பிரதாய இரவு விருந்துபசாரம் நடைபெற்றது.