30th December 2024 00:47:08 Hours
தலைசிறந்த தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு கஜபா படையணி 29 டிசம்பர் 2024 அன்று உணர்வுபூர்வமாக பிரியாவிடை வழங்கியது. இந்த நிகழ்வு அவரது முன்மாதிரியான சேவைக்கு மரியாதை மற்றும் நன்றியுணர்வை தெரிவிக்கும் வகையில் நடைபெற்றது.
அன்றைய நிகழ்வுகள் படையணி நினைவுச் சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆரம்பமானது. வெளிச்செல்லும் இராணுவத் தளபதியை கௌரவிக்கும் வகையில் கஜபா படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கஜபா படையணி ஸ்தாபகத் தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஐ.வி.கே.எம் விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து படையணியின் பெருமை மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சம்பிரதாய அணிவகுப்பு இடம்பெற்றது.
பின்னர், அனைத்து பங்கேற்பாளர்களுடனும் குழுப்படம் எடுக்கப்பட்டது. இது படையணி உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் பாராட்டு உணர்வை வெளிப்படுத்தியது. விழாவை நினைவுகூரும் வகையில், வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்தின் போது, வெளிச்செல்லும் இராணுவத் தளபதி படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துரையாடியதுடன், தனது சேவைக்காலத்தின் நினைவுகளையும் சாதனைகளையும் பகிர்ந்து கொண்டார்.
கஜபா படையணி படையினர் இராணுவத் தளபதிக்கு, தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், தளபதி புறப்பட்டபோது அவர்கள் வழங்கிய வீதியோர பிரியாவிடையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இராணுவ தளபதிக்கு வழங்கிய சம்பிரதாய பிரியாவிடை நிகழ்வுகளுடன், நேற்று மாலை கஜபா படையணி அதிகாரிகள் உணவகத்தில் பாரம்பரிய இரவு விருந்துபசாரம் நடைபெற்றது.
இந்நிகழ்வு மரியாதை மற்றும் தோழமையை அடையாளப்படுத்தியதுடன், வெளிச்செல்லும் இராணுவத் தளபதியின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வாய்ப்பு அதிகாரிகளுக்கு கிடைத்தது.