27th December 2024 13:05:05 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 231 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 23 டிசம்பர் 2024 அன்று பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினர்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் தம்மின்ன மகா வித்தியாலயம், அலவ்வ கும்புர மகா வித்தியாலயம், விஷ்வ மித்ரா பாலர் பாடசாலை, அருணா சிங்கிதி பாலர் பாடசாலை, தேவ்மினி பாலர் பாடசாலை, பூர்ணிமா பாலர் பாடசாலை, புபுது பாலர் பாடசாலை, மினிமுத்து பாலர் பாடசாலை, தீப்தி பாலர் பாடசாலை மற்றும் சமாதி பாலர் பாடசாலை ஆகிய பாடசாலைகளை சேர்ந்த பிள்ளைகள் பரிசுப் பொதிகளை பெற்றுக்கொண்டனர்.
மேஜர் ஜெனரல் குமுது பெரேரா (ஓய்வு) மற்றும் திருமதி குமுது பெரேரா ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த முயற்சிக்கான அனுசரணையை அட்லஸ் மற்றும் ஹேமாஸ் அவுட்ரீச் தனியார் நிறுவனம் வழங்கியது. இந்நிகழ்வில் 12 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.