Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2024 12:09:31 Hours

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பெருமைமிகு 99வது விடுகை அணிவகுப்பு

தியத்தலாவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியினால் அதன் 99 வது விடுகை அணிவகுப்பில் இராணுவ தளபதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஏ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இலங்கை இராணுவத்திற்கு மேலும் 222 பயிலிளவல் அதிகாரிகளை 2024 டிசம்பர் 21 அன்று பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது.

பிரதம அதிதி பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீ அருண ஜயசேகர (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பயிலிளவல் அதிகாரிகளுக்கு மிகவும் விலையுயர்ந்த ஜனாதிபதியின் அதிகாரவாணை வாள்களை வழங்கினார்.

இப் பாடநெறியில் புதிய அதிகாரிகள் பாடநெறி 93 பி, குறுகிய பாடநெறி 21, மற்றும் குறுகிய பாடநெறி 22 ஆகிய பாடநெறிகளை சேர்ந்த பயிலிளவல் அதிகாரிகளும், உகாண்டா, கென்யா, காம்பியா மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பத்து வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகளும் அடங்குவர்.

முதல் நிகழ்வாக குதிரைப்படையினை முதன்மை படுத்திய ஊர்வலம் பிரதம அதிதியை இராணுவ கல்வியற் கல்லூரியின் அணிவகுப்பு சதுக்கத்திற்கு அழைத்து வந்தது. இராணுவ மரபுகளுக்கு இணங்க, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் படையினர் பிரதம அதிதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை வழங்கினர். பின்னர், அன்றைய பிரதம அதிதி உயிரிழந்த போர் வீரர்களின் விலைமதிப்பற்ற கடந்த கால தியாகங்களை மறக்காமல் இராணுவ கல்வியற் கல்லூரியின் போர் வீரர் நினைவுச் தூபியில் மலர் அஞ்சலி மற்றும் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

அணிவகுப்பு தளபதியான இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் யுபி மாரசிங்க யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு, அன்றைய பிரதம அதிதியிடம் முறையான அனுமதி கோரினார்.

அணிவகுப்பின் முறையான பரிசீலனைக்குப் பிறகு, பிரதம அதிதி தனித்தனியாக சிறந்த சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கினார்.

விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:

பயிலிளவல் அதிகாரி பாடநெறி 93 பி - நிரந்தர படை

தகுதி வரிசையில் முதலாமிடம் - படையலகு அதிகாரி டி.ஆர்.கே ஜயக்கொடி

வாள் கௌரவம் – படையலகு அதிகாரி டி.ஆர்.கே ஜயக்கொடி

அதிகார பிரம்பு கௌரவம் – பயிலிளவல் லான்ஸ் கோப்ரல் கே. ஹூசேன் (உகாண்டா குடியரசு)

பயிலிளவல் குறுகிய பாடநெறி 21- நிரந்தர படை

தகுதி வரிசையில் முதலாமிடம் - பயிலிளவல் அதிகாரி ஜீ.ஏ.பீ.ஹேரத்

அதிகார பிரம்பு கௌரவம் – பயிலிளவல் சார்ஜன் ஏ. புலோனே (உகாண்டா குடியரசு)

பயிலிளவல் குறுகிய பாடநெறி 22 - நிரந்தர படை

தகுதி வரிசையில் முதலாமிடம் - படையலகு அதிகாரி கே.எம்.எஸ் ஹேரத்

பிரதம அதிதி அவர்கள் பட்டதாரிகளுக்கு ஆற்றிய சுருக்கமான உரையில் அவர்களின் சாதனைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், தேசத்திற்கு அவர்களின் கடமைகளை பொறுப்புடனும் விடாமுயற்சியுடனும் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இலங்கை இராணுவத்திற்கு சேவை செய்வதற்கும் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கு பங்களிப்பு செய்வதற்கும் ஒழுக்கமான மற்றும் தொழில்முறை அதிகாரிகளை உருவாக்குவதற்கு இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு பிரதிபலித்தது.

தொடர்ந்து புதிதாக அதிகாரவாணை பெற்ற அதிகாரிகள் புகழ்பெற்ற 'மகர தோரணத்தின்' படிகள் ஊடாக இராணுவ கல்வியற் கல்லூரியின் நிறைவேற்ற அதிகாரியுடன் மரியாதை செலுத்தியவாறு அணிவகுத்து சென்றனர்.

பின்னர், சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில்,இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் பெரேரா ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுடன் இணைந்து அன்றைய விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்கள் வீரமிகு இளம் அதிகாரிகளின் தோள்களில் ஜனாதிபதி அதிகாரவாணையின் அடையாளம் அணிவித்தனர்.

அதிகாரவாணையின் அணிவித்தல் விழாவினை தொடர்ந்து விடுகை அணிவகுப்பு சாம்பிரதாயங்களின் உச்சக்கட்டத்தைக் குறிக்கும் வகையில் பயிலிளவல் அதிகாரிகள் உணவகத்தில் பாராம்பரிய அதிகாரவாணை பெற்ற அதிகாரிகளின் இரவு விருந்துபசாரம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பிரதம அதிதியாகக் கௌரவ அதிதிகளுடன் கலந்துகொண்டார். புதிதாக பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும் கலந்து கொண்டு, அவர்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் தொழில்சார் பாத்திரங்களுக்கு மாறியதைக் கொண்டாடினர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் துணைவியர் கலாநிதி (திருமதி) ருவணி ரஷிக்கா பெரேரா, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், முன்னாள் தளபதிகள், வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள், சிரேஷ்ட அதிகாரிகளின் துணைவியர்கள் மற்றும் பயிலிளவல் அதிகாரிகளின் குடும்பத்தினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.