21st December 2024 16:31:37 Hours
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிளிலவல் அதிகாரிகளின் இறுதி ஆய்வு விளக்கக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை தியத்தலாவ சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அவர்களின் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீ அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே கலந்துகொண்டார்.
பயிலிளவல் அதிகாரிகள் பயிற்சியின் கட்டாய அங்கமான விளக்கக்காட்சி, "இலங்கை மற்றும் தெற்காசியாவிற்கு நாடுகடந்த குற்றங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள்: பாதுகாப்புப் படைகளின் பங்கு" என்ற தொனிப்பொருளில் முன்வைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி அடிப்படையிலான ஆய்வறிக்கையானது, பயிலிளவல் அதிகாரிகளின் பாடத்தின் விரிவான ஆய்வு, பாதுகாப்பு சவால்களை வலியுறுத்துதல் மற்றும் சாத்தியமான பதில்களை முன்மொழிதல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
வருங்கால தீர்மானிகளாக, பயிலிளவல் அதிகாரிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை அறிஞர்கள் மற்றும் இராணுவக் கல்வியாளர்களின் குழுவிற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, ஒரு ஊடாடும் கேள்வி-பதில் அமர்வில் கலந்துகொண்ட நிபுணர்களிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துக்களை பெற்றுக்கொண்டதுடன் மேலும் பயிலிளவல் அதிகாரிகள் பகுப்பாய்வு மற்றும் விளக்கக்காட்சி திறன்களை மேம்படுத்த இது உதவியது.
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் தலைமையில் விழாவில் சமீபத்திய பதிப்பின் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றது.முதல் பிரதி பாதுகாப்பு பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக வழங்கப்பட்டது.நிகழ்வின் நிறைவில், பாதுகாப்பு பிரதியமைச்சர் தனது அவதானிப்புகளைப் பகிர்ந்து கொண்டதுடன், அவர்களின் ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை விளக்கக்காட்சிகளுக்காக பயிலிளவல் அதிகாரிகளைப் பாராட்டினார்.
பாதுகாப்பு இணைப்பாளர்கள், இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் ஓய்வுபெற்ற தளபதிகள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் ஆசிரிய உறுப்பினர்களும் பங்குபற்றினர்.