11th December 2024 14:00:41 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 10 டிசம்பர் 2024 அன்று தியத்தலாவ கோல்ப் கழக வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதனை நோக்கமாக கொண்டிருந்தது.
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகளுடன் இணைந்து பெறுநர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களைத் தணிக்கும் வகையில் 30 உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பங்குபற்றினர்.