07th December 2024 06:28:31 Hours
மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 58 வது தளபதியாக 5 டிசம்பர் 2024 அன்று தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையினை பெறுவதற்கு முன்னதாக மறைந்த கெப்டன் சாலிய அலதெனிய பீடப்ளியூவீ அவர்களின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார்.
சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில், மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு சிரேஷ்ட அதிகாரி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். விழாவை நினைவு கூறும் வகையில் முகாம் வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, புதிய தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு புதிய தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.