07th December 2024 06:20:40 Hours
இலங்கை இராணுவத்தில் இருந்து 33 ஆண்டு கால சேவையை பூர்த்தி செய்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எம்.எம் சல்வத்துர (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 06 டிசம்பர் 2024 அன்று, தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதன்போது அவரது குடும்பத்தினர் அவருக்கு பணிக்காலம் முழுவதும் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.
பதிலுக்கு, மேஜர் ஜெனரல் எம்.எம் சல்வத்துர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டலுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் எம்.எம் சல்வத்துர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பாடநெறி பீஎம்ஏ- 3 இல் 02 மே 1991 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 14 ஏப்ரல் 1992 இல் இரண்டாம் லெப்டினன் நிலையில் கெமுனு ஹேவா படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட பின்னர், 30 செப்டம்பர் 2024 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார். சிரேஷ்ட அதிகாரி 08 ஒக்டோபர் 2024 அன்று தனது 55 வது வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர், இலங்கை இராணுவத் தொண்டர் படையின் முதன்மை பதவி நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
7 வது கெமுனு ஹேவா படையலகின் குழு கட்டளையாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அதிகாரி பயிலிளவல் பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், 7 வது கெமுனு ஹேவா படையலகின் குழு கட்டளையாளர், கொஹுவல கெமுனு ஹேவா ரியர் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி, 7 வது கெமுனு ஹேவா படையலகின் அதிகாரி கட்டளை, 513 வது காலாட் பிரிகேட் தலைமையக பொது பணிநிலை அதிகாரி 3 (செயல்பாடுகள்), ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் குழு கட்டளையார், 7 வது கெமுனு ஹேவா படையலகின் (கட்டளை மற்றும் நிர்வாக நிறுவனம்) அதிகாரி கட்டளை, 7 வது கெமுனு ஹேவா படையலகின் இரண்டாம் கட்டளை அதிகாரி, ஹைட்டியில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஸ்திரப்படுத்தல் பணி இலங்கை குழுவின் கட்டளை அதிகாரி, 55 வது காலாட் படைப்பிரிவு தலைமையக பொதுப் பணி அதிகாரி 2 (செயல்பாடுகள்), வன்னி பாதுகாப்பு படைத் தலைமைய அலுவலக பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைத்தல்), 12 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையக ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி (பயிலிளவல் அதிகாரி ஆட்சேர்ப்பு பிரிவு), கொழும்பில் உள்ள செயற்பாட்டு பிரிவின் 09 வது திட்ட முகாமை பிரிவின் தளபதி, மேலதிக பாதுகாப்புப் பணிநிலை அலுவலகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (பயிற்சி மற்றும் கோட்பாடு), ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் பாதுகாப்புப் படையின் இராணுவக் கண்காணிப்பாளர், இராணுவ வழங்கல் பாடசாலையின் பிரதித் தளபதி, 21 வது காலாட் பிரிகேட் தளபதி, 142 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையக நிலைய தளபதி மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையின் முதன்மைப் பணிநிலை அதிகாரி அகிய பதவிகளை தனது பதவிக்காலத்தில் வகித்துள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி ரண விக்ரம பதக்கம், ரண சூரப் பதக்கம் ஆகிய விருதுகளையும் போர்க்களத்தில் அவரது துணிச்சலைப் பாராட்டி, உத்தம சேவை பதக்கம் ஆகிய விருதுகளும் அவரது சிறப்புமிக்க மற்றும் விசுவாசமான சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன.
அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார், இதில் நிர்வாக பிரவு பாடநெறி, இலங்கையில் அடிப்படை தமிழ் பாடநெறி மற்றும் சிறந்த மேற்பார்வையாளர் மற்றும் பணிநிலை அதிகாரி பாடநெறி, மற்றும் பாகிஸ்தானில் அடிப்படை பயிலிளவல் பாடநெறி, இந்தியாவில் இளம் காலாட் படை அதிகாரி மற்றும் இந்தியாவில் இளம் கட்டளை அதிகாரி பாடநெறி ஆகியவை அடங்கும்.