07th December 2024 06:24:42 Hours
நெலும் பொகுண மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் டி.பி.எல் கொலோன் யூஎஸ்பீ இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் அவரது அலுவலகத்திற்கு 06 டிசம்பர் 2024 அன்று அழைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பணிக்காலத்திலும் சிரேஷ்ட அதிகாரி ஆற்றிய சேவையை இராணுவத் தளபதி பாராட்டினார். பின்னர், மேஜர் ஜெனரல் டி.பி.எல் கொலோன் யூஎஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார். கலந்துரையாடலின் பின்னர், இராணுவத் தளபதியினால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு மற்றும் பாராட்டுச் சின்னமாக விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் இங்கே:
மேஜர் ஜெனரல் டி.பி.எல் கொலோன் யூஎஸ்பீ அவர்கள் 1990 நவம்பர் 12 அன்று இராணுவ நிரந்தர படையணியின் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். ரத்மலான கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை பொறியியல் படையணியில் 1992 நவம்பர் 20 நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட பின்னர், 2024 மார்ச் 20, அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார். சிரேஷ்ட அதிகாரி 2024 டிசம்பர் 10 தனது 55 வது வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். அவர் ஓய்வுபெறும் போது, நெலும் பொகுண மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கின் பொறுப்பதிகாரியாக பதவி வகிக்கின்றார்.
5 வது கள பொறியியல் படையணியின் குழுக்கட்டளையாளர், 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியன் நிறைவேற்று அதிகாரி, இலங்கை பொறியியல் படையணியின் 12 பிரிவின் கட்டளையாளர், இலங்கை இராணுவ பொறியியல் பயிற்சி பாடசாலையின் நிறைவேற்று அதிகாரி, 8 வது களப்பொறியியல் படையணியின் 82 வது பிரிவின் கட்டளை அதிகாரி, 4 வது (தொ) இலங்கை இராணுவ பொறியியல் படையணி பதில் இராண்டாம் கட்டளை அதிகாரி, 4 வது (தொ இலங்கை இராணுவ) பொறியியல் படையணி பணிநிலை அதிகாரி 2, ஹய்டி ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை இலங்கை குழாம் கட்டளை அதிகாரி, பணிக்குழு 5 இல் தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 65 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப்பணி நிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), இலங்கை இராணுவ 10 வது களப் பொறியியல் படையணி மற்றும் 4 வது (தொ) பொறியியல் படையணி கட்டளை அதிகாரி, சுகததாச தேசிய விளையாட்டு வளாக அதிகாரசபையின் சிரேஷ்ட இணைப்பாளர், இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டுக் கிளையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவின் தலைவர், இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டுக் கிளையின் பதில் கேணல் (ஒருங்கிணைப்பு), இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டுக் கிளை கேணல் ஒருங்கிணைப்பு (பதிவு மற்றும் திட்டமிடல் பிரிவு), பாதுகாப்புத் தலைமையக வளாகத் திட்டத்தில் திட்ட முகாமையளர், பாதுகாப்புத் தலைமையக வளாகத் திட்டத்தின் திட்ட முகாமை பிரிவின் மேலதிக பணிப்பாளர் 641 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் நெலும் பொகுண மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கின் பொறுப்பதிகாரி போன்ற நியமனங்களை வகித்துள்ளார்.
அவரது சிறப்புமிக்க மற்றும் விசுவாசமான சேவைக்காக உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டது.
அவரது இராணுவ வாழ்க்கை முழுவதும் சிரேஷ்ட அதிகாரி மிதிவெடி முகாமைத்துவ பாடநெறி, பொது தகவல் தொழில்நுட்ப திறன் பாடநெறி, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பயிற்றுவிப்பாளர் பயிற்சி பாடநெறி, இலங்கை ஐக்கிய நாடுகளின் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பாடநெறி, பொறியியல் அதிகாரிகள் அடிப்படை பாடநெறி பங்களாதேஷ், இந்தியாவில் வெடிகுண்டுகளை அகற்றுவதற்கான ஒருங்கிணைந்த அதிகாரிகள் பாடநெறி மற்றும் சீனாவில் வெடிகுண்டு மற்றும் வெடித்தல் பொறியியல் பாடநெறி உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார்.
மேலும் சிரேஸ்ட அதிகாரி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் சிவில் பொறியியலில் இளங்கலை விஞ்ஞானம் (பாதுகாப்பு கற்கைகள்) மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையிடமிருந்து கணினி பயன்பாடுகளுக்கான தேசிய வர்த்தக சான்றிதழ் (இலங்கை கணினி ஓட்டுநர் உரிமம்) ஆகிய கற்கைகளையும் பயின்றுள்ளார்.