07th December 2024 06:30:59 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 06 டிசம்பர் 2024 அன்று சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் வழமையான ‘தளபதியின் விரிவுரையை’ நிகழ்த்தினார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி அதன் சர்வதேச கல்வி நற்பெயருக்கு புகழ்பெற்றது. மேலும் முப்படை அதிகாரிகளுக்கு உயர் கல்வியை வழங்குகின்றது. எதிர்கால பொறுப்புகள் மற்றும் சவால்களை சந்திக்க அறிவார்ந்த திறன்களை வளர்க்கும் அதே வேளையில் அவர்களுக்கு கட்டளை மற்றும் பணியாளர் நிபுணத்துவத்தை வழங்குகிறது. இந்த விரிவுரையில் பாடநெறி எண். 18 இல் பதிவுசெய்யப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச இளங்கலை பட்டதாரிகளும் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மரியாதைக்குறிய வரவேற்பை தொடர்ந்து, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி கேற்போர் கூடத்தில் பற்கேற்பாளர்களுக்கு அன்றைய விரிவுரையாளரை அறிமுகப்படுத்தினார். அங்கு 150 இளங்கலை பட்டதாரிகள், இதில் இராணுவத்தைச் சேர்ந்த 78 அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த 21 அதிகாரிகள், 26 விமானப்படை அதிகாரிகள், மற்றும் பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான், ருவாண்டா, சவூதி அரேபியா, செனகல், அமெரிக்கா மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 வெளிநாட்டு அதிகாரிகள் இராணுவத் தளபதியின் வருகைக்காகவும் அவரது உரைக்காகவும் அமர்ந்திருந்தனர்.
"2030 இல் இலங்கை இராணுவத்தின் சீர்திருத்தங்கள்" எனும் தொனிப்பொருளில் இராணுவத் தளபதியின் விரிவுரையானது நவீனமயமாக்கல், திறன்-கட்டுமானம், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் மூலோபாய இணைப்பு ஆகியவற்றில் முக்கியமாக கவனம் செலுத்தியது.
விரிவுரையின் முடிவில், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் இளங்கலைப் பட்டதாரிகள் கேள்வி-பதில் அமர்வின் போது பேச்சாளருடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றனர். தொடர்ந்து விமானப்படை பிரதம பயிற்றுவிப்பாளர் நன்றியுரை ஆற்றினார். பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி அனைத்து இளங்கலைப் பட்டதாரிகளின் சார்பாக, நினைவுப் பரிசு வழங்கி, இராணுவத் தளபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இராணுவத் தளபதியும் நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கினார். இராணுவத் தளபதி வெளிச்செல்லும் முன் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் பாராட்டுக் குறிப்புகளையும் பதிவிட அழைக்கப்பட்டார்.