Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2024 16:37:04 Hours

52 வது காலாட் படைப்பிரிவின் முன்வைத்தல் சோதனை போட்டி

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஆர் பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் கருத்திற்கமைய 30 நவம்பர் 2024 அன்று ‘பிரிகேட் முன்வைத்தல் சோதனை’ படைப்பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

சர்வதேச உறவுகள் தொடர்பான அறிவை மேம்படுத்துவதும், கட்டளைக்கு உட்பட்ட படையலகுகளில் பணியாற்றும் அதிகாரிகளின் முன்வைத்தல் திறன் மற்றும் பேச்சாற்றலை மேம்படுத்துவது இப் போட்டியின் நோக்கமாகும். இப்போட்டியில் முதலாம் இடத்தை முதலாவது இயந்திரவியற் காலாட் படையணியும், 4வது இலங்கை சிங்கப் படையணி இரண்டாமிடத்தையும், 7வது விஜயபாகு காலாட் படையணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு விளக்கங்களைக் கேட்டு அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக்கொண்டனர்.