Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2024 14:28:18 Hours

2 வது சமிக்ஞை பிரிகேடின் முதலாம் ஆண்டு நிறைவு

2 வது சமிக்ஞை பிரிகேடின் முதலாம் ஆண்டு நிறைவு 2024 ஒக்டோபர் 30 அன்று 2 வது சமிக்ஞை பிரிகேட் தளபதி பிரிகேடியர் வைஎஸ்பீ சுமணசிங்க ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொண்டாடப்பட்டது.

29 ஒக்டோபர் 2024 அன்று, ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற்றதுடன் தொடர்ந்து, பாதுக்க கஹவலவில் உள்ள சிறார்களுக்கு சிறப்பு இரவு விருந்தும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறார்களுக்கான தேநீர் விருந்து மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

ஆண்டு நிறைவு நாளில், தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் அவர் புதிய பெயர் பலகையை திறந்து வைத்து மரக்கன்றினையும் நட்டு, படை வீரர்களுக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவிலும் பங்கேற்றார். சிவில் ஊழியார்களின் சிறப்பான சேவைக்காகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

போர் வீரர்கள் மற்றும் படையினரை கௌரவிக்கும் போதி பூஜையுடன் நாள் நிறைவு பெற்றது. 2024 நவம்பர் 4, அன்று, பாதுக்கவில் உள்ள மெர்குரி கிளப் ஹவுஸில் அனைத்து நிலையினரின் ஒன்றுகூடல் நடைபெற்றது, இதன் போது முன்னாள் பிரிகேட் உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.