Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2024 18:02:38 Hours

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் உதவி

சீரற்ற காலநிலை காரணமாக, 2024 நவம்பர் 28 ம் திகதி வெல்பொதுவெவ, கொபேகன பிரதேச செயலகப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மூன்று நபர்களை 1வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் வெற்றிகரமாக மீட்டனர்.

இம் மீட்பு நடவடிக்கைக்காக படகு, இலகுரக வாகனம், கனரக வாகனம் மற்றும் சிறப்பு தேடுதல் மற்றும் மீட்பு கருவிகளை படையினர் பயன்படுத்தினர். 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிக்காட்டலின் கீழ், இந்த நடவடிக்கை பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பதை உறுதிசெய்ததுடன் அவசர காலத்தில் உதவ இராணுவத்தின் உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.