Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2024 11:28:28 Hours

புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு

இலங்கை பீரங்கிப் படையணியின் மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக 2024 நவம்பர் 28 அன்று இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், அவர் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதனை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் தளபதியாகப் பணியாற்றினார்.

இந் நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் சுருக்கமான விவரம்:

மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 44வது பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி ஆவார். அவர் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியில் பெருமைக்குரிய வெளிக்கள செயற்பாட்டாளர் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினார். அவர் ஒரு துடிப்பான விளையாட்டு வீரராகவும், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கல்லூரி மாணவ தலைவராகவும் இருந்தார்.

அவர் இந்தியா டெஹ்ரா டன், இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியின் பட்டதாரியாக 05 ஒக்டோபர் 1990 இல் 7 வது காலாட் இலங்கை பீரங்கி படையணியில் நியமிக்கப்பட்டார். படையணியில் பல நியமனங்களை பெற்ற அவர், 18வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 661 மற்றும் 663 வது காலாட் பிரிகேட்களின் பிரிகேட் தளபதியாக தலைமை தாங்கினார்.

மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பல பணிநிலை மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரிகள் ஆய்வு மையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர், பாதுகாப்பு சேவைகள் கட்டளை பயிற்சிக் குழுவின் தலைவர் மற்றும் பணிநிலை பணிப்பாளர், 66 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, பின்னர் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணிநிலை கல்லூரியில் தளபதியாக கடமையாற்றினார். இரண்டு முதுகலை பட்டம் பெற்ற, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை கல்லூரியின் பெருமைக்குரிய பழைய மாணவர் ஆவார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலை அறிவியல் மற்றும் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுறவு திட்டத்தில் முதுகலை அறிவியல், வஷிங்டன் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், டி.சீ, அமெரிக்கா, ஏனைய வெளிநாட்டு இராணுவக் கல்வியில் 1993 இந்தியா, பீரங்கி இளம் அதிகாரிகள் பாடநெறி, 1996 அதிகாரிகள் உடல் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பட்ட படிப்பு, 2000 பாகிஸ்தான் நவ்ஷேரா, பீரங்கி பாடசாலையின் அதிகாரிகளின் இருப்பிடப் பாடநெறி, மேம்பட்ட கன்னெரி பணநிலை பாடநெறி, இந்தியா 2003, நீண்ட கன்னரி பணிநிலை பட்டபடிப்பு, இந்தியா 2007-2008, ஆண்டுகளின் பீரங்கி படையலகு கட்டளை பாடநெறி, 2012 சீனா மற்றும் உயர் பாதுகாப்பு நோக்குநிலை பாடநெறி எம்எச்ஒடபிள்யூ இந்தியா 2015 ஆகிய பாடநெறிகளை பின்பற்றியுள்ளார்.

அவர் சர்வதேச மாணவர் குழுவின் தலைவராகவும் 2020 ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 2020 ஆம் ஆண்டில் சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுக்கான சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு விருதை அமெரிக்காவின் வஷிங்டன் டிசி தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் ரண சூர பதக்கம் மற்றும் போர்க்களத்தில் காட்டப்படும் வீரத்திற்கான பத்து பதக்கங்களைப் பெற்ற பெருமைக்குரியவர். அவர் திருமதி சுவேந்திரினி திஸாநாயக்காவை மணந்து ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களின் தந்தையாவர்.