Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2024 19:57:19 Hours

24 வது காலாட் படைப்பிரிவின் படையினர் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடல்

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை, கொண்டுவட்டுவான் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டமையினால் ஏற்பட்ட அவசர நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில், 24 வது காலாட் படைப்பிரிவின் படையினர் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு பங்கேற்பதற்கு வசதிகளை மேற்கொண்டுள்ளனர். சடையந்தலாவ, கொண்டுவட்டுவான், வீரயடி, கிளியோதயா, மற்றும் அடல் ஓயா எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றின் ஊழியர்களுக்கு உதவுவதற்காக டப்ளியூஎம் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

கூடுதலாக, ட்ரக்குகள் மற்றும் யூனி-பபல் வாகனங்களுடன் இராணுவ படையினர் கொண்டுவட்டுவானில் அவசரநிலைக்காக தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். 241 வது காலாட் பிரிகேட் படையினர் ஒலுவில் வீரயடி குளக்கட்டினை மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி சீர்செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், உள்ளூர் கிராம மக்களுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக கால்வாயை சுத்தம் செய்தனர்.