Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2024 20:55:30 Hours

இராணுவத்தினரின் உதவியுடன் சித்துமினியகுளம் குளக்கட்டு புனரமைப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள சித்துமினிய குளத்தின் ஒரு பகுதி 2024 நவம்பர் 26 அன்று இடிந்து விழுந்ததில் கூரை கிராமம் வெள்ள அபாயத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐபீ ஜயசிங்க ஆர்டப்ளியூபீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 5 வது (தொ) இயந்திரவியற் காலாட் படையணி படையினர் கிராம மக்களுடன் இணைந்து மணல் மூட்டைகள் மூலம் சரிந்து விழுந்த குளக்கட்டை மீளமைக்க துரிதமாக செயற்பட்டனர்.

இக்கூட்டு முயற்சியானது 91 வீடுகள்,277 குடியிருப்பாளர்கள் மற்றும் விவசாய நிலங்களை மேலும் சேதத்திலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த தூரித செயற்பாடு பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உடனடி நிவாரணமாக அமைந்தது.