Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2024 12:08:29 Hours

யாழ். தளபதி வட மாகாண சபையினருக்கு விரிவுரை

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கௌரவ வடமாகாண ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண சபையின் பிரதம செயலாளர் திரு.எல்.இளங்கோவன் ஆகியோரின் அழைப்பின் பேரில் 18 நவம்பர் 2024 அன்று வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் “உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் வெற்றி” என்ற தலைப்பில் தலைமைத்துவ மற்றும் ஊக்கமளிக்கும் விரிவுரையாற்றினார்.

இதன்போது சவால்களை கண்டறிதல், இலக்குகளை உருவாக்குதல், கட்டுப்படுத்தும் சிக்கல்கள், மதிப்புகளை உருவாக்குதல், பணி-வாழ்க்கை சமநிலையை நிர்வகித்தல் மற்றும் குழுப்பணியின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளில் விரிவுரையாற்றப்பட்டது.

இவ்விரிவுரையில் கௌரவ ஆளுநர், தலைமைச் செயலாளர் மற்றும் 100 திணைக்கள பிரதானிகள் கலந்து கொண்டனர்.

விரிவுரையின் இறுதியாக, கௌரவ ஆளுநர் அவர்கள் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்.