12th November 2024 07:41:33 Hours
கொழும்பு மெலே வீதியிலிருந்த (கொம்பனி வீதி) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தின் கொஸ்கம புதிய தளத்தினை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் 2024 நவம்பர் 11 அன்று அங்குரார்பணம் செய்யப்பட்டது. இது இலங்கை இராணுவத்தின் மறுசீரமைப்பு முயற்சியில் 2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தை திறமையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட குறைந்த படையாக மாற்றுவதன் ஒரு திட்டமாகும்.
வருகை தந்த இராணுவத் தளபதியை, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய இராணுவத் தளபதியின் வாகன தொடரணிக்கு படையினரால் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இராணுவத் தளபதி பதாகையினை திரை நீக்கம் செய்ததுடன், நிகழ்ச்சியின் நினைவாக வாளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.
திறப்பு விழாவை தொடர்ந்து, இராணுவத் தளபதி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள 1 ஆம் சமிஞ்சை பிரிகேடிற்கு விஜயம் மேற்கொண்டார். அங்கு அவர் படையினருக்கு உரையாற்றியதுடன், இராணுவத்தின் அனைத்து பணிகளுக்கும் அவர்களின் பங்களிப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்னர், இராணுவத் தளபதி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் நிலைய தளபதி, 1 ஆம் சமிஞ்சை பிரிகேட் தளபதி மற்றும் 11 வது மற்றும் 12 வது இலங்கை சமிஞ்சை படையணியின் கட்டளை அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக "கதஹுரு பூமி ஹிமிகம் சன்னஸ் பத்திரய" எனும் உறுதியினை வழங்கினார். இராணுவத்தின் முன்னோக்கி மூலோபாயத்திற்கு ஏற்ப இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ மறுசீரமைப்பைக் குறிக்கும் வகையில் இது வழங்கப்பட்டது.
பின்னர், நிகழ்வின் நினைவாக, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதி பிரதம அதிதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். இந்நிகழ்வின் போது பிரதம விருந்தினர் படங்கள் எடுத்துக் கொண்டு, விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டதுடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, பிரதம சமிக்ஞை அதிகாரி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.