Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2024 12:57:29 Hours

இராணுவத் தளபதி கண்டி இராணுவ தள வைத்தியசாலைக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கண்டி இராணுவ தள வைத்தியசாலையின் செயற்பாடுகளை ஆராய்வதற்கும், அதன் தற்போதைய செயற்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும் 09 நவம்பர் 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த இராணுவத் தளபதியின் வாகன தொடரணிக்கு சம்பிரதாயபூர்வமாக மரியாதை செலுத்தி கௌரவிக்கப்பட்டதுடன், கண்டி இராணுவ தள வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூ.எம்.எச்.எஸ் வீரசூரிய அவர்களினால் மரியாதையாக வரவேற்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையின் சேவைகள் மற்றும் வசதிகள் பற்றிய விரிவான விளக்கத்தை கட்டளை அதிகாரி வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி புதிய மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டதுடன், அதன் செயல்பாட்டு பகுதிகளை ஆய்வு செய்தார் மேலும் அதன் பராமரிப்பை உறுதி செய்வதற்கான தனது எண்ணங்களை குறிப்பிட்டார்.

அதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் இராணுவ பணியாளர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சேவை செய்ய மருத்துவமனை உடனடியாகத் தனது நடவடிக்கைகளைத் ஆரம்பித்தது. மேலும் இராணுவத் தளபதியின் மேற்பார்வையில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

தற்போது, மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு 122 படுக்கைகள் மற்றும் வெளி நோயாளர் பிரிவு சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை மற்றும் எலும்புமூட்டு சேவைகள், பல்வேறு நோய்களுக்கான மருத்துவ சேவைகள், பல் பராமரிப்பு, நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முழுமையான அறுவை சிகிச்சை அரங்கம் உட்பட பல சேவைகளை வழங்குகிறது.

இராணுவத் தளபதி பின்னர் அனைத்து நிலையிருக்கமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார்.

இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி, பொறியியல் சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவ வைத்திய சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவ பல் மருத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.