Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd November 2024 11:15:53 Hours

முதலாம் படைத் தளபதி 58 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை படையலகுகளுக்கு விஜயம்

முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்ஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 58 வது காலாட் படைப்பிரிவு, 583 மற்றும் 581 வது காலாட் பிரிகேட், கொமாண்டோ பிரிகேட் தலைமையகம், 4 வது கொமாண்டோ படையணி மற்றும் 5 வது விஜயபாகு காலாட் படையணி ஆகியவற்றிற்கு 2024 ஒக்டோபர் 26, 28, 29 ஆம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த அவரை ஒவ்வொரு இடத்திலும் சிரேஷ்ட அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றதுடன், படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு நிறுவனங்களினதும் பணியமர்த்தல், கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றார்.

சிரேஷ்ட அதிகாரி தனது விஜயத்தின் போது, படைப்பிரிவு, பிரிகேட்கள் மற்றும் படையலகுகளை பார்வையிட்டு குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், முகாம் வளாகத்தில் மரக்கன்று நாட்டினர்.

ஒவ்வொரு இடத்திலும் படையினருக்கு உரையாற்றும் போது, முதலாம் படை அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளைத் தவிர்ப்பதன் முக்கியத்துவம், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையைப் பேணுதல், இராணுவ ஒழுக்கத்தை நிலைநிறுத்துதல், செயல்திறன் மிக்க திட்டமிடல் மற்றும் முதலாம் படைக்கு ஆதரவாக செயல்படத் தயார்நிலை உள்ளிட்ட முக்கிய விடயங்களைப் பற்றி குறிப்பிட்டார்.

புறப்படுவதற்கு முன், வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.