Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th October 2024 18:21:15 Hours

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் வருடாந்த மருத்துவ முகாம் ஏற்பாடு

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி, லயன்ஸ் கிளப் ஆப் ஸ்ரீலங்கா ஜயவர்தனபுர கோட்டே, மாகாண சுகாதார சேவைகள் வடமத்திய மாகாண பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுராதபுரம், சுகாதார வைத்திய அதிகாரி மஹவிலச்சிய மற்றும் பிரதேச வைத்தியசாலை தந்திரிமலை ஆகியன வருடாந்த சுகாதார முகாமை 06 ஒக்டோபர் 2024 அன்று தந்திரிமலை ராஜ மகா விகாரை வளாகத்தில் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடாத்தினார்.

இந்த மருத்துவ முகாமில் வெளிநோயாளர் பிரிவு, சர்வாங்க மருத்துவம், கண், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தை மருத்துவம், எலும்பியல், மனநல மருத்துவம் மற்றும் பல் அறுவை சிகிச்சை நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் மூன்று நடமாடும் பல் மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முப்படை மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட்டன. பல் சத்திரசிகிச்சை, ஆய்வக பரிசோதனைகள், பார்வை மற்றும் செவிப்புலன் பரிசோதனைகள், ஒலியலைகளை உபயோகித்து படங்கள் மூலம் நோயைக் கண்டறிதல் மற்றும் பிசியோதெரபி போன்ற மேலதிக சேவைகள் மாகாண மற்றும் பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் தந்திரிமலை பிரதேச வைத்தியசாலையின் ஆதரவுடன் நடாத்தப்பட்டன.

தந்திரிமலை விமலஞான வித்தியாலயத்தின் 100 எளிய மாணவர்களுக்கு அவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்கும் வகையில் இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி அடுத்த கல்வியாண்டுக்கான பயிற்சி புத்தகங்கள், எழுதுபொருட்கள் பரிசு வவுச்சர்கள் மற்றும் டிஎஸ்ஐ இலிருந்து கொள்வனவு செய்த காலணியும் வழங்ப்பட்டன.

மேலும், இம்முகாமில் மொத்தம் 805 பொதுமக்கள் பயனடைந்ததுடன், அப்பகுதியைச் சேர்ந்த 70 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசியப் மகப்பேறு பொருட்களையும், தேவையுடைய 110 வாசிப்புக் கண்ணாடிகளையும் வழங்கினார்கள்.

இந்த திட்டம் 213 வது காலாட் பிரிகேட் மற்றும் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றினால் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.