Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2024 18:58:41 Hours

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதியினால் யாழில் தேவையுடைய குடும்பத்திற்கு வீடு வழங்கல்

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபிஜேகே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் சமூக ஆதரவினை வெளிகாட்டும் முகமாக 09 ஒக்டோபர் 2024 அன்று யாழ்ப்பாணம் சங்கானையில் திரு.செல்வராசா சுதாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றின் சாவிகள் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

யாழ். பாதுகாப்புப் படை தலைமையத்தின் தலைமையில் நடைபெற்று வரும் வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வழிகாட்டலின் கீழ் 513 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஈஎம்எல்பீ ஏக்கநாயக்க யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் இவ்வீட்டை நிர்மாணித்தனர்.

இத்திட்டத்திற்கு வலிகாமம் மேற்கு பிரதேச செயலக அலுவலகம் மற்றும் நன்கொடையாளர் திரு.வி.தபோதரன் ஆகியோரிடமிருந்தும் பங்களிப்பு கிடைத்தது.

திரு.செல்வராசா சுதாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதிய அத்தியாயத்தை அடையாளப்படுத்தும் வகையில், சமய ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் இவ் வீட்டின் சாவி கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த உற்சாகமூட்டும் முன்முயற்சி சமூகத்தில் உள்ள ஒற்றுமை மற்றும் ஆதரவின் சான்றாக நிற்பதுடன் இது தங்குமிடம் மட்டுமல்லாது எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் வழங்குகிறது.