Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th October 2024 21:19:12 Hours

இராணுவ தினத்தை முன்னிட்டு தோழர்களிடையே கூட்டுறவு இராபோசணம்

இராணுவ தினத்தை முன்னிட்டு பனாகொடை இராணுவ முகாம் வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை (10 ஆம் திகதி) இலங்கை இராணுவத்தினரிடையே தோழமையை வளர்க்கும் நோக்கத்துடன் விசேட நட்புணர்வு இரவு உணவு விருந்து நடைபெற்றது. இந்த வருடாந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், 25 படையணிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, கூட்டு இராபோசணம் இராணுவத்தின் ஆண்டு விழாக்களுடன் தொடர்புடைய ஒரு பாரம்பரிய நிகழ்வாக மாறியுள்ளது. இது அனைத்து நிலையினரையும் முறைசாரா அமைப்பில் சந்திப்பதற்கும், மகிழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வதற்கும், இராணுவத்தில் அவர்களின் அனுபவங்களை ஏற்படுத்தவும் ஒரு தளத்தை வழங்குகிறது. இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு நிகழ்வு சிறப்பு முக்கியத்துவம் பெற்றது.

இராணுவத் தளபதி சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து நிகழ்வின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினர். இராணுவத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், படையணியின் படைத் தளபதிகள் மற்றும் படையணியின் கேணல்கள் ஆகியோருடன் மாலை முழுவதும் சிப்பாய்கள் கலந்து கொண்டு, இராணுவ குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தினர். இராணுவத் தளபதி படையினரை பார்வையிட்ட போது ஒவ்வொரு படையணியனதும் படையணி சார்ஜன் மேஜர்களுக்கு முதல் நாள் அட்டை மற்றும் 75 வது ஆண்டு நிறைவு பதக்கத்தையும் வழங்கினார். இந்த மாலையானது, இலங்கை இராணுவத்தை அதன் வரலாறு முழுவதும் வழிநடத்திய நீடித்த விழுமியங்களை நினைவூட்டுவதாக அமைந்தது: விசுவாசம், சேவை மற்றும் சீருடையில் வாழ்க்கையின் பகிரப்பட்ட அனுபவங்கள். இந்த நிதானமான மற்றும் நட்பு சூழ்நிலையில் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைத்ததன் மூலம், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சக்தியாக அவர்களை ஒன்றிணைக்கும் இணைப்புகளை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது.

இந்நிகழ்வில் பதவி நிலை பிரதானி, பிரதிப் பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, முதன்மைப் பணி நிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், படையணியின் படைத் தளபதிகள், படையணியின் கேணல்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.