11th October 2024 15:59:18 Hours
11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி 2024 ஒக்டோபர் 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டு வடக்கு கற்பகச்சோலை பாலர் பாடசாலையில் பாடசாலை பொருட்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 513 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஈ.எம்.எல்.பீ ஏக்கநாயக்க யூஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது 27 பாலர் பாடசாலை சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், சிறுவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.