Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2024 15:20:40 Hours

3 வது கொமாண்டோ படையணி படையினரால் புனேவ பாடசாலை புனரமைப்பு

இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, 3 வது கொமாண்டோ படையணி உள்ளூர் கல்வியை ஆதரிக்கும் வகையில் வவுனியா, புனேவ வ/களுகுன்னன்மடுவ அரச பாடசாலையை புனரமைக்கும் பணியை மேற்கொண்டது.

இந்த பிராந்திய பாடசாலையின் வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 30 படையினர் இத்திட்டத்தை மேற்கொண்டனர்.

மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சுத்தமான சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், பாடசாலை கட்டிடங்களை சுத்தம் செய்தல், பழுதுபார்த்தல் மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற விடயங்களில் படையினர் ஈடுபட்டனர்.

உட்கட்டமைப்பு சவால்களை எதிர்கொண்ட இப்பாடசாலையை, இத்திட்டம் கற்றலுக்கு மிகவும் உகந்த இடமாக மேம்படுத்தியது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.