05th October 2024 17:30:11 Hours
212 வது காலாட் பிரிகேட் 2024 உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில் 30 செப்டெம்பர் 2024 அன்று பாடசாலை பொருட்கள் வழங்கும் நன்கொடை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
திருமணமானவர்களுக்கான அனுராதபுரம் விடுதியில் வசிக்கும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் இருபது பிள்ளைகள் இந்த திட்டத்தில் பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.எம்.சி ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர். நதித் கௌசல்யா அவர்களின் நிதியுதவியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.