06th October 2024 09:20:36 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 4 ஒக்டோபர் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
தேசிய இரத்த வங்கியின் யாழ்ப்பாணக் கிளையின் மருத்துவ ஊழியர்களின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடாத்தப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.