05th October 2024 17:24:53 Hours
எதிர்வரும் 74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கொழும்பு ஆயர் வண. மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பல முக்கிய பேராயர்களின் பங்குபற்றலுடன் ஒக்டோபர் 4 ஆம் திகதி மாலை சிறப்பு ஆராதனை நடைப்பெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து இராணுவக் கிறிஸ்தவ சங்கத்தின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோர் இராணுவக் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவருடன் இணைந்து அன்றைய பிரதம அதிதியை வரவேற்றதுடன், நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
பின்னர், இராணுவக் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் வரவேற்பு உரையை நிகழ்த்தியதுடன், பங்கேற்பாளர்களுக்கு நிகழ்வின் கருப்பொருளை எடுத்துரைத்தார். கொழும்பு பேராயர் வண. மால்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் நிர்வகிக்கப்பட்ட விசேட ஆராதனை மற்றும் நன்றி தெரிவிக்கும் ஆராதனையானது இராணுவக் கொடி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி கொடி மற்றும் அனைத்துப் படையணிக் கொடிகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்டது. நாட்டுக்காக இராணுவத் தளபதியின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதற்காக மதபோதகர்கள் இராணுவத் தளபதியை ஆசீர்வதித்தனர். பின்னர், அனைத்து பங்கேற்பாளர்களும் இராணுவ கீதத்திற்கு எழுந்து நின்றனர்.
அதே சமயம், இலங்கை பெப்டிஸ்ட் மிஷன் சபையின் தலைவர் வண.வில்லி வார்னன் ரணசிங்க அவர்கள், போர்க்களங்களிலும் ஏனைய இடங்களிலும் உயிரிழந்த போர்வீரர்கள் மற்றும் காணாமல் போன போர்வீரர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை வழங்கினர். மேலும் புனர்வாழ்வில் உள்ள அனைத்து இராணுவப் போர்வீரர்களுக்கும் அவர்கள் நிரந்தர காயங்களுக்கு பின் குணமடைய ஆசீர்வாதங்களைத் தெரிவித்தார். பேராயர்கள் தங்கள் சுருக்கமான பிரார்த்தனை சொற்பொழிவுகளில் இராணுவத்தின் ஈடு இணையற்ற சேவைகளைத் தொடர அவர்களின் பாராட்டத்தக்க பணிகளுக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர்.
நிகழ்வின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஆன்மீக நல்லிணக்கம் மற்றும் பொது மக்களிடையே சமாதானத்தை மேம்படுத்துவதற்காக தேவாலயத்தால் வழங்கப்பட்ட மத சேவைகளை இராணுவம் பாராட்டுவதன் அடையாளமாக பேராயர்களுக்கு நிதியுதவி வழங்கினர்.
மெதடிஸ்ட் தேவாலயத்தின் உறுப்பினர்கள், முன்னாள் இராணுவத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள், அனைத்து படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ வீரர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.