Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th October 2024 05:07:54 Hours

புதிய ஜனாதிபதியை இராணுவத் தளபதி மரியாதையுடன் சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், இலங்கையின் முப்படைகளின் சேனாதிபதியும், இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியுமான, அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களை இன்று (ஒக்டோபர் 04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மரியாதை நிமித்தம் முதல் சந்திப்பை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது இராணுவத் தளபதி புதிய ஜனாதிபதிக்கு தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் ஜனாதிபதி தேசிய பாதுகாப்பை இராணுவம் தொடர்ந்து பேண வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார்.

நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்கும் இராணுவத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். மேலும், எதிர்வரும் இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து இராணுவத் தளபதி ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.

இந்த சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி புதிய ஜனாதிபதிக்கு நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கினார்.