03rd October 2024 17:17:23 Hours
2024 ஒக்டோபர் 01 ஆம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.ஆர்.டி.எஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 6 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் நிட்டம்புவ விஹார மகாதேவி பாலர் பாடசாலையின் 40 பிள்ளைகளுக்கும், சியம்பலாபே இசுரு சிறுவர் இல்லத்தின் 24 பிள்ளைகளுக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்திருந்ததுடன், பொருட்களும் வழங்கப்பட்டன.
பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியையும் பொழுதுபோக்கையும் வழங்கும் வகையில் சிறப்பு இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.