Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2024 06:19:21 Hours

கதிர்காமம் கிரிவெஹெரவில் கொடிகளுக்கு ஆசிர்வாதம்

ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புனித கதிர்காமம் கோவில் மற்றும் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதி சமய நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.

அனைத்து இராணுவ நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகள் இராணுவ வாத்தியகுழுவினருடன் மூன்று முறை கிரிவெஹர தூபியைச் சுற்றி கொண்டுவரப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆசீர்வாதத்திற்காக கொடிகள் வைக்கப்பட்டன. அதே சமயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட கலந்து கொண்ட குழுவினர் தூபிக்கான சிறப்பு வஸ்திர (கப்ருக்க) பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி கிரிவெஹர விகாரையின் தலைமை பிக்கு வண. கோபவக தம்மிந்த தேரரை சமய நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குமாறு முறைப்படி அழைத்தார்.

தேரர், மகா சங்க உறுப்பினர்களுடன் இணைந்து சமய வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், வளாகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றிவதில் பதவி நிலை பிரதானி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து மகா சங்க உறுப்பினர்களுக்கு 'பிரிகர' மற்றும் 'கிலான்பச' (தானம்) வழங்கினர். மத அனுஷ்டானங்களுக்காக கதிர்காமம் விகாரை வளாகத்தில் கொடி ஏந்தியவர்கள் மீண்டும் அணிவகுத்து நிற்கும் முன், சிறப்பு பூஜை மஹாசென் தேவாலயத்தில் இடம்பெற்றது.

இராணுவக் கொடி ஏந்தியவர்கள் மற்றும் வாத்தியகுழுக்களைக் கொண்ட ஊர்வலம் வளாகத்திற்குச் சென்றது. அங்கு கொடிகள் பதவி நிலை பிரதானிக்கு வழங்குவதற்காக சிரேஷ்ட அதிகாரிகளால் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் ‘அஷ்டபலபோதியா’வில் சமய அனுஷ்டானங்களில் பதவி நிலை பிரதானி புனித அரச மரத்திற்கு ‘அட்டபிரிகரை’ வழங்கினார். அதனைத் தொடர்ந்து, கோவிலின் உள் அறைக்கு ஆசீர்வாதத்திற்கான அனைத்து கொடிகளையும் வழங்கியதுடன், புனித தலத்தின் அபிவிருத்திக்காக பஸ்நாயக்க நிலமே அவர்களிடம் நிதியுதவியும் வழங்கினார். படைக்கப்பட்டபொங்கல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதிகள், இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி, 12 வது காலாட் படைப்பிரிவு தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.