Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th September 2024 17:53:17 Hours

16 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

16 வது இலங்கை சிங்கப் படையணி படையினர் கரப்பக்குட்டியில் குறைந்த வருமானம் பெறும் தேவையுடைய குடும்பத்திற்கான புதிய வீட்டை 24 செப்டம்பர் 2024 அன்று நிர்மாணித்து முடித்தனர். புதிதாக நிர்மாணித்த வீட்டை 56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பயனாளியிடம் கையளித்தார்.

இலங்கையிலுள்ள நெதர்லாந்தின் ஸ்டிச்சிங் மிஷன் நிறுவனர் திரு. சாந்த தலுகமகே மற்றும் ஜப்பானைச் சேர்ந்த விவசாயத் தொழிலதிபர் திரு. எஸ்.ஜே. சமரவீர ஆகியோரின் நிதியுதவியில் இத்திட்டம் சாத்தியமானது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.