Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th September 2024 11:29:04 Hours

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் இரத்த தானம்

இராணுவத் தளபதியின் எண்ணகருவிற்கு அமைய, இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் 26 செப்டம்பர் 2024 அன்று இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தேசத்திற்கு சேவை செய்வதில் இராணுவத்தின் அர்ப்பணிப்பை இந்த திட்டம் கோடிட்டுக் காட்டுகின்றது. பனாகொடை இராணுவ போதி ராஜாராம விகாரையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இத்தொண்டு முயற்சியானது இலங்கையில் இரத்த தானம் செய்வதற்கான தற்போதைய கோரிக்கையை நிவர்த்தி செய்வதையும் நாட்டின் சுகாதார சேவைகள் எதிர்கொள்ளும் சமீபத்திய சவால்களை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இராணுவ வீரர்கள், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ.எச்.யூ.டி. விஜேரத்ன, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் இரத்தமாற்று நிபுணர் கேணல் எஸ்.எல்.எஸ். குமாரகே யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் என 718 நன்கொடையாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அவர்களின் பங்களிப்புகள் தேசிய இரத்த மாற்று நிலையத்தில் இரத்த இருப்புக்களை நிரப்புவதற்கு உதவியது.

இந்த மருத்துவ திட்டத்திற்கு தேசிய இரத்த மாற்று நிலையம், கொழும்பு இராணுவ மருத்துவமனை, பொது வைத்தியசாலை ஜயவர்தனபுர, போதனா வைத்தியசாலை ராகம மற்றும் அபேக்ஷா வைத்தியசாலை மஹரகம ஆகியன ஆதரவளித்தன.