27th September 2024 19:40:06 Hours
எதிர்வரும் இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் அனுராதபும் அபிமன்சல - 1 நல விடுதியில் புனர்வாழ்வு பெற்றுவரும் போர்வீரர்களை பார்வையிடும் நோக்கத்துடன் விஜயம் மேற்கொண்டனர்.
பிரதம அதிதியை அபிமன்சல - 1 இன் தளபதி பிரிகேடியர் கே.டி.யூ கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றதை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் விடுதிகளை பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது இராணுவத் தளபதி அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினார்.
பின்னர், இராணுவத் தளபதி ஏனைய அதிகாரிகளுடன் குழு படம் எடுத்து கொண்டதுடன், காயமடைந்த போர் வீரர்களுடன் மதிய உணவு விருந்தில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
இராணுவத் தளபதி அவர் புறப்படுவதற்கு முன்னர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில கருத்துக்களை பதிவிட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் நிறைவுற்றன.
இந் நிகழ்வின் போது இராணுவ பதவி நிலை பிரதானி , பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி , இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, முதன்மை பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், பணிப்பகத்தின் பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.