24th September 2024 12:00:30 Hours
இலங்கை இராணுவம் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி தனது 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளது.
இராணுவம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள பெருமை சேர்க்கும் அனைத்து மதங்களின் மத வழிபாடுகள் மற்றும் விழாக்களுடன் எளிமையாகவும் கண்ணியமாகவும் 2024 செப்டெம்பர் 27 ஆம் திகதி ஆண்டு விழா ஆரம்பமாகவுள்ளது.
இராணுவ கொடி மற்றும் படையணிகளின் கொடிகளுக்கு அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதி, ஸ்ரீ தலதா மாளிகை, கதிர்காமம் 'கிரிவெஹெர' ஆகியவற்றில் ஆசீரவாத பூஜைகளும் பொரளை புனிதர்கள் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனையும், கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் பிரார்த்தனை மற்றும் கொழும்பு 6 மயூரபதி கோவிலில் சிறப்பு பூஜையும் 2024 செப்டம்பர் 27 தொடக்கம் ஒக்டோபர் 4ம் திகதி வரை முறையே நடைப்பெறவுள்ளது. அதற்கமைய இராணுவ தலைமையகத்தில் இரவு முழுவதும் பிரித் பாராயணமும் மகா சங்க உறுப்பினர்களுக்கு தானம் வழங்கலும் ஓக்டோபர் 5-6 ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
2024 ஒக்டோபர் 7ம் திகதி பத்தரமுல்லை போர் வீரர் நினைவு தூபியில் முறையான இராணுவ நிகழ்வுகளுடன் ஆண்டு விழாக்கள் நிறைவடையும். தொடர்ந்து இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க அணிவகுப்பு மற்றும் அனைத்து நிலையிருக்கான இரவு விருந்துபசாரம் ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெறும்.
இந்நிகழ்வுகளில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், இராணுவத் தளபதி நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களை அனுராதபுர நல விடுதியான 'அபிமன்சல 1' இல் சந்தித்து அவர்களின் நலம் விசாரிப்பதற்காகவும், ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக பரிசுப் பொதிகளை விநியோகிப்பதற்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது. 8 செப்டெம்பர் 2024 அன்று அத்திடிய மிஹிந்து செத் மெதுர போர் வீரர்களுக்காக ஒரு சிறப்பு இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. மேலும், 2024 ஒக்டோபர் 25 முதல் 27 ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இராணுவ கண்காட்சி மற்றும் அணிநடை கண்காட்சி என்பன இடம்பெறும்.