Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2024 21:34:19 Hours

ஜனாதிபதி செயலகத்தில் எளிமையான நிகழ்வுகளுடன் புதிய ஜனாதிபதி கடமை பொறுப்பேற்பு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகவும், முப்படைகளின் தளபதியாகவும் எச்.ஈ அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் பதவியேற்பு விழா ஜனாதிபதி செயலகத்தில் 2024 செப்டெம்பர் 23ம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் போது, அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள், இலங்கையின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சத்தியப் பிரமாணத்தை தொடர்ந்து, ஜனாதிபதி அலுவலகத்தில் மகாசங்கத்தினர் ‘செத்பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதி தனது பதவியை ஏற்றுக் கொள்ளும் வகையில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திட்டார்.

புதிய ஜனாதிபதி தேசத்திற்கு ஆற்றிய உரையில், "நாம் ஒரு புதிய தூய்மையான அரசியல் கலாசாரத்தை நிறுவ வேண்டும், இந்த இலக்கை அடைவதற்கு நான் உறுதியளிக்கிறேன், மேலும் அரசியல் அமைப்பில் மக்களின் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு நாங்கள் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று கூறினார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டுத் தூதுவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.