Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2024 12:04:21 Hours

5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணினால் தேவன்பிட்டியில் உள்ள ஏழைக் குடும்பங்களின் மாணவர்களுக்கு உதவி

மன்னார் தேவன்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 34 பாடசாலை மாணவர்களுக்கு 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணியினர் உலர் உணவுப் பொதிகள் மற்றும் எழுதுபொருட்களை 2024 செப்டெம்பர் 11 ஆம் திகதி வழங்கினர்.

ரூ. 300,000 பெறுமதியான இந்த நன்கொடை, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வான்கூவரில் உள்ள இலங்கை சமூகத்தைச் சேர்ந்த திரு. மஞ்சுள ஹேரத் மற்றும் அவரது தோழர்களின் அனுசரணையின் மூலம் இது சாத்தியமானது. 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், அருகில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.