17th September 2024 13:08:10 Hours
2024 ஆகஸ்ட் 02 முதல் 2024 செப்டம்பர் 09 வரை நடைபெற்ற அடிப்படை நீச்சல் பாடநெறி எண். 21, அனுராதபுரம் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக நீச்சல் தடாகத்தில் 2024 செப்டம்பர் 09 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இராணுவ வீரர்களின் அடிப்படை நீச்சல் மற்றும் உயிர்காக்கும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த பாடநெறியில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பல்வேறு படையலகுகளைச் சேர்ந்த 36 சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
நிறைவு விழாவின் போது, இந்த பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் சாதனைகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 21 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டு படையினரின் அர்ப்பணிப்பிற்கும் கடின உழைப்பிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
11 வது இலங்கை பீரங்கி படையணியின் சி/166924 கன்னர் டிஜீஎம்எஸ் ஆரியவன்ஷ அவர்கள் தனது சிறந்த செயல்திறனுக்காக பாடநெறியின் சிறந்த மாணவராக கெளரவிக்கப்பட்டார்.
இந்த பாடத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக நீர் பாதுகாப்பு மற்றும் நுரையீரல் புத்துயிர்ப் பாதுகாப்பு பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது, இது வரலாற்றில் முதல் முறையாகும். பங்கேற்பாளர்கள் அவர்களின் வெற்றியின் அடையாளமாக இலங்கை உயிர்காப்பு நிறுவனத்திடமிருந்து சிறப்பு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.