Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2024 12:40:09 Hours

13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி ஆரம்பம்

13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2024 செப்டம்பர் 12 அன்று இலங்கை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் 13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபை பிரதி தலைவருமான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் கலந்துகொண்டார்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 13 வது பாதுகாப்புச் சேவை விளையாட்டுப் போட்டியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துடன் அதன் பின்னர் முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வீரர்கள் பாதுகாப்புச் சேவை விளையாட்டுச் சுடரை ஏற்றி வைத்தனர். இந் நிகழ்வில் 13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் உத்தியோகபூர்வ சின்னமான ‘கேசர’ தொடக்க விழாவின் சிறப்பு அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இராணுவ தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டியானது இலங்கை இராணுவத்தால் நடத்தப்படவுள்ளதுடன், இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையினரின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது. இப் விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 2025 வரை நடைபெறவுள்ளதுடன், இந்த போட்டியில் 39 நிகழ்வுகளில் இராணுவ, விமானப்படை மற்றும் கடற்படை விளையாட்டுப் போட்டிகளில் 4000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

வரலாற்றில், இப் போட்டிகளின் மூலம் தகுதி பெற்ற முப்படை வீரர்கள் இலங்கைக்கு எண்ணற்ற சர்வதேச பதக்கங்களைக் கொண்டு வந்துள்ளனர். இந்த விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்காக விளையாட்டுப் படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு சேவை விளையாட்டுக் கழகத்தின் செயலாளர், பாதுகாப்பு சேவை விளையாட்டு குழாம் அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் விளையாட்டுக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள் குழுவும் கலந்துகொண்டனர்.