11th September 2024 23:48:14 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நலன்புரி வசதி வளாகத்தை 11 செப்டம்பர் 2024 அன்று திறந்து வைத்தார்.
புட் சிட்டி, பேக்கரி மற்றும் உணவகம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இந்த இரண்டு மாடி வளாகம் படையினருக்கு அத்தியாவசிய வசதிகளை சலுகை விலையில் வழங்கும். 10 வது இலங்கை பொறியியல் படையணி படையினர் மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி படையினரால் வழங்கப்பட்ட மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ மற்றும் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஜீபீ சிசிர குமார அவர்களுடன் பிரதம அதிதிக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புடன் அன்றைய நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இராணுவத் தளபதி மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் நினைவுப் பதாகையை திரைநீக்கம் செய்து சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். நிகழ்வின் சிறப்பை மேலும் மெருகூட்டும் முகமாக சிறப்பு விருந்தினர்களால் பாரம்பரிய மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. சம்பிரதாயங்களைத் தொடர்ந்து, தளபதி புதிய வசதி வளாகத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், பிரதம அதிதியுடன் குழு படம் எடுக்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து ரெண்டெஸ்வஸ் பெவிலியனில் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தும் நடைபெற்றது.
பிரதம அதிதியின் வருகையைக் குறிக்கும் வகையில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதோடு நிகழ்வு நிறைவடைந்தது. பின்னர் இராணுவத் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், அத்தகைய வசதிகளை வழங்குவதன் மூலம் படையினரின் நலனை மேம்படுத்துவதற்கான இராணுவத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டினார்.
இந் நிகழ்வில் இராணுவ தலைமையக பொறியியல் சேவைகள் பணிப்பாளரும் வழங்கல் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்ணான்டே எச்டிஎம்சி எல்எஸ்சி ஏஏடீஓ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி சிப்பாய்கள் பங்குபற்றினர்.