09th September 2024 15:11:27 Hours
ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் ஊடாக மௌரா மெத்செவன விகாரையின் பிரதம பிக்குவின் வேண்டுகோளுக்கு இணங்க, 12 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீகேஎஸ்டப்ளியூடப்ளியூஎம்ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் கட்டளையின் கீழ் 12 வது காலாட் படைப்பிரிவு படையினர் விகாரை வளாகத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்ட சுவருக்கு பூச்சு மற்றும் வர்ணம் பூசுவதில் உதவினர்.
அப்பகுதி நன்கொடையாளர்கள் தேவையான பொருட்கள் மற்றும் வளங்களை வழங்கியதுடன் 12 வது காலாட் படைபிரிவின் படையினர் தங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை வழங்கி 06 செப்டம்பர் 2024 அன்று இப் பணியினை நிறைவுசெய்தனர்.
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஓர் அங்கமாக கட்டி முடிக்கப்பட்ட மதில் விகாரைக்கு ஒப்படைக்கப்பட்டது.
அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் மற்றும் மௌர மெத்செவன விகாரையின் பிரதம பிக்கு ஆகியோர் 12 வது காலாட் படைப்பிரிவின் படையினரின் விலைமதிப்பற்ற உதவிகளுக்காக மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.