Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th September 2024 18:44:56 Hours

உடல் சுறுசுறுப்பு மற்றும் போர் திறன் சார்ந்த போட்டி - 2024 அம்பகாமத்தில் நிறைவு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 561 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் உடல் சுறுசுறுப்பு போர் திறன் அமைப்பு போட்டி - 2024, அம்பகாமம் கள சூட்டு திடலில் 2024 செப்டம்பர் 2, அன்று நடைபெற்றது

இப் போட்டி 2024 ஆகஸ்ட் 27 முதல் 29 வரை உடல் சுறுசுறுப்பு பரிசோதனைகள் மற்றும் போர் திறன் பரிசோதனைகள் 2024 செப்டம்பர் 1ம் மற்றும் 2 ம் திகதிகளில் இடம்பெற்றது. 56 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் உள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் படையினர் இப்போட்டியில் பங்கேற்றனர்.

12 வது விஜயபாகு காலாட் படையணி சிறந்த அணியாகவும், 11வது கெமுனு ஹேவா படையணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. இரண்டாம் லெப்டினன் டிஎஸ் எகொடகெதர "பிட்டஸ்ட் ஒப் த பிட்" அதிகாரியாகவும், லான்ஸ் கோப்ரல் டிஜிகேடிஎஸ் ரம்புக்வெல்ல சிறந்த சிப்பாயாகவும் தெரிவாகினர்.